"சரித்திரம்"
ஒரு மனசு வேணும்.
வழங்கவும்.
அம்மனசிடம் ஒரு குரல் உண்டு
கரகரவென்கிற உப்புக் குரல்.
கேட்க விருப்பமா?
எழுந்து நடங்கள்.
ஆளரவமற்ற பாலத்தை
தேர்வு செய்யவும்.
அடர் நிசியெனில் நல்லது.
புகைவண்டி நேரங்களை
குறித்து வைத்திருப்பீர்கள் எனில்
உத்தமம்.
பாலத்தில் ஏறி நின்று
புகை வண்டி வருகிறதா எனப் பார்க்கவும்.
போதும்.
தவ்வும் முன்பு கேட்டீர்களா?
உங்கள் தலையை வாங்கிய தாதிப் பெண்
வெளியில் ஓடிச் சொன்னாள்
நீங்கள் ஆண் எனவோ பெண் எனவோ.
குதூகலமாக
கரகரவென்கிற உப்புக் குரலில்.
கவிஞர் ராஜசுந்தரராஜனின் கருத்துரை
கவிஞர்கள் பெரிதாகத் திட்டமிட்டு எழுதுவதில்லை. அவர்கள்பாட்டுக்கு எழுதுகிறார்கள். வாசகர்கள்தான் அதைப் பண்ணிப்பண்ணி வாசிக்கிறார்கள்.
ஆனால் எல்லா எழுத்தையும் அப்படிப் பண்ணிப்பண்ணி வாசித்துவிட முடியாது. பொம்மை பிடிப்பதற்கு வாகான களிமண் (கவனியுங்கள், ஞானம் அல்ல; களிமண்) எழுத்தில் இருக்க வேண்டும்.
தற்கொலைக்கு முன்னுகிற ஒரு தருணத்தைப் பற்றிய கவிதை இது.
அதற்கு இசைவாகவே, //எல்லாவற்றையும் இழக்க
ஒரு மனசு வேணும்// என்று, அது என்னவோ நேர்முறையான ஒரு விசயம் போல, தொடங்குகிறது கவிதை.
//வழங்கவும்// என்பது //இழக்க// என்பதின் எதிர்மறை என்றாலும், இங்கே, இதுவும் நேர்முறைப் பொருளின் தொனியிலேயே நிற்கிறது (காரணம், இரண்டு சொல்லாடல்களும் 'ஈதல்' என்னும் அறச்செயல் மனப்படிவில் சமன்படுவதால்).
//கரகரவென்ற உப்புக் குரல்// இதில், 'உப்பு' என்னும் சொல்லிடுகையின் பொருத்தமும் அருமையும்... என்ன சொல்ல!
||நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்|| (மத். 5:13) என்பது இயேசுவின் வார்த்தை. அதன் பொருள், ‘உலகவழக்கில் எளிமையும் பயனும் உள்ளவர்களாக நாம் இருக்கவேண்டும்’ என்பது. இப்போது பொருத்திப் பாருங்கள்:
//தாதிப் பெண்
வெளியில் ஓடிச் சொன்னாள்,
நீங்கள் ஆண் எனவோ பெண் எனவோ -
குதூகலமாக
கரகரவென்கிற உப்புக் குரலில்.//
'அடர்நிசி' இருண்மையைத் துணைக்கோடல். ஆனால், 'பாலம்' இரு கரைகளையும் இணைக்கிற ஒரு கட்டுமானம்; 'புகைவண்டி' அதில் இயலும் செயல்பாடு.
களிமண் இருக்கிறதா, இல்லையா?
ஆ! விடுபட்டுவிட்டது:ஆனால் எல்லா எழுத்தையும் அப்படிப் பண்ணிப்பண்ணி வாசித்துவிட முடியாது. பொம்மை பிடிப்பதற்கு வாகான களிமண் (கவனியுங்கள், ஞானம் அல்ல; களிமண்) எழுத்தில் இருக்க வேண்டும்.
தற்கொலைக்கு முன்னுகிற ஒரு தருணத்தைப் பற்றிய கவிதை இது.
அதற்கு இசைவாகவே, //எல்லாவற்றையும் இழக்க
ஒரு மனசு வேணும்// என்று, அது என்னவோ நேர்முறையான ஒரு விசயம் போல, தொடங்குகிறது கவிதை.
//வழங்கவும்// என்பது //இழக்க// என்பதின் எதிர்மறை என்றாலும், இங்கே, இதுவும் நேர்முறைப் பொருளின் தொனியிலேயே நிற்கிறது (காரணம், இரண்டு சொல்லாடல்களும் 'ஈதல்' என்னும் அறச்செயல் மனப்படிவில் சமன்படுவதால்).
//கரகரவென்ற உப்புக் குரல்// இதில், 'உப்பு' என்னும் சொல்லிடுகையின் பொருத்தமும் அருமையும்... என்ன சொல்ல!
||நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்|| (மத். 5:13) என்பது இயேசுவின் வார்த்தை. அதன் பொருள், ‘உலகவழக்கில் எளிமையும் பயனும் உள்ளவர்களாக நாம் இருக்கவேண்டும்’ என்பது. இப்போது பொருத்திப் பாருங்கள்:
//தாதிப் பெண்
வெளியில் ஓடிச் சொன்னாள்,
நீங்கள் ஆண் எனவோ பெண் எனவோ -
குதூகலமாக
கரகரவென்கிற உப்புக் குரலில்.//
'அடர்நிசி' இருண்மையைத் துணைக்கோடல். ஆனால், 'பாலம்' இரு கரைகளையும் இணைக்கிற ஒரு கட்டுமானம்; 'புகைவண்டி' அதில் இயலும் செயல்பாடு.
களிமண் இருக்கிறதா, இல்லையா?
'ஈதல்', 'ஈனுதல்' இவை 'ஈ' என்னும் வேர்ச்சொற் பிறந்து, 'இழத்தல்' 'வழங்கல்' என்றும் பொருள் தருவன ஆம்.
'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்பதில் எதிர்மறையாக இயலும் 'தலைவாங்கிய', //உங்கள் தலையை வாங்கிய தாதிப்பெண்// என்பதில் நேர்முறையாக மாறி இயல்வதைக் கவனியுங்கள்!
கவிஞர் என்னமா வெளையாடியிருக்காரு!
7 comments:
நல்ல முயற்சி மக்கா. முதல் அன்பிற்கும் நன்றி!
//கவிஞர்கள் பெரிதாகத் திட்டமிட்டு எழுதுவதில்லை. அவர்கள்பாட்டுக்கு எழுதுகிறார்கள்//
இதுதான் உண்மை :-)
//வாசகர்கள்தான் அதைப் பண்ணிப்பண்ணி வாசிக்கிறார்கள்//
இது இன்னும் உண்மை :-))
வாசக சாலை வெற்றி பெற வாழ்த்துகள்!
நல்ல முயற்சி. வாழ்த்துகள் நேசன்
கவிஞர்கள் மட்டும் அல்ல கதை எழுதுபவர்கள் கூட பெரிதாகத் திட்டமிட்டு எழுத வில்லை.
என்பதை வண்ண நிலவன் வாயிலாக அறிந்தேன்.
கேணி சந்திப்பில் வாசகர்கள் அவரிடம் கேட்டனர். எப்படி இவ்வளவு அற்புதமாகத் திட்டமிட்டு கடல்புரம், எஸ்தர், எழுதினீர்கள் என்று கேட்டால் அவர் சொல்கிறார், நான் மிகவும் சாதரணமாக விளையாட்டுப் போக்கில் எழுதியது தான்.
அதுவும் கடல்புரம் இரண்டே நாட்களில் எழுதி முடித்து விட்டேன் என்று சொன்னார். நீங்கள் தான் அதை ஒரு அதிசயப் பிரம்மாண்டப் படைப்பாக கருதுகிறீர்கள்.
கேட்டதும் மிரண்டு போன பதிவர் சைய்யது அருகில் இருந்த பாலு மகேந்திராவைப் பார்க்கிறார். பாலு மகேந்திராவின் முகத்திலும் வியப்பும் ஆச்சர்யமும்.
வாழ்த்துக்கள் வாசகசாலைக்கு..
அன்புடன் ஒரு வாசகன்...
நல்ல கவிதை. அந்த கணத்தை சுற்றி சுற்றி வந்து ஒரு புள்ளியை தொட்டு நிற்பதாலேயே இது மிக நல்ல கவிதை என்று தோன்றுகிறது. டோபியாஸ் உல்ஃபின் Bullet in the Brain சிறுகதையை நினைவுபடுத்தியது கவிதை....
மிக நல்ல முயற்சி நேசன். வாழ்த்துகள்.
பா.ரா
நன்றிண்ணே
எல்.கே
நன்றிகள்
ராம்ஜி நல்ல பின்னூட்டம் , தகவல்
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்
மணிஜி
நன்றிண்ணே
சித்தார்த்
புல்லட் இன் தெ ப்ரெயின் நல்ல நினைவு கூறல். சென்ற கல்குதிரையில் மூளையில் பாய்ந்த புல்லட் என்று மொழிபெயர்ப்பாக வந்தது :)
மிக்க நன்றி சித்து
மூளையில் பாய்ந்த புல்லட் பத்தி கேள்விப்பட்டேன் நேசன். இன்னும் வாசிக்கல. மூல சிறுகதையின் வசைசொற்கள் தமிழ்ல எப்படி வந்திருக்குன்னு பாக்கவாச்சும் படிக்கனும் இத :)
Post a Comment